

ஹாங்காங்கில் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரை போலீஸார் சிலர் அடித்து, உதைத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பானதால், அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தம் கோரி ஹாங்காங்கில் சமீபமாக பெருமளவில் போராட்டம் நடை பெற்று வருகிறது. இதில் பல்வேறு குழுக்கள் பங்கேற்றுள்ளன. அதில் ஒன்று 'சிவிக் பார்ட்டி' ஆகும். இந்தக் குழுவைச் சேர்ந்தவர் கென் சாங் ஆவார். இவரை நேற்று முன் தினத்தின் இரவில் சில போலீஸார் தனியிடத் துக்கு அழைத்துச் சென்று அவர் மீது வன்முறையைப் பிரயோகித்துள்ளனர். சுமார் நான்கு நிமிடங்கள் நீண்ட இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி ஒன்று, டி.வி.பி. தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது.
இதைத் தொடர்ந்து மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்ட தால், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸாரை பணி நீக்கம் செய்திருப்பதாக அரசு கூறியுள்ளது. ஆனால் எத்தனை போலீஸார் என்ற கணக்கை அது வெளியிடவில்லை.இதுகுறித்து ஹாங்காங்கின் பாதுகாப்புத்துறைச் செயலர் லாய் டுங் க்வாக் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்தச் சம்பவம் மீது நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.