

அகதிகள், முஸ்லிம்களுக்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. அதிபர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகள் அமெரிக்காவில் நுழைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.
இதை கண்டித்து அமெரிக்கா முழுவதும் ட்ரம்புக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகை முன்பு ஆயிரக்கணக் கானோர் திரண்டு அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர்.
நியூயார்க், சிகாகோ, டெட் ராய்ட், மியாமி, லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன், பிட்ஸ்பர்க் உள்ளிட்ட பெருநகரங்கள், அனைத்து விமான நிலையங்களிலும் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ட்ரம்புக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்கா முழுவதும் வியாபித்து பரவி வருகிறது.
மதத் தலைவர்கள் கண்டனம்
கிறிஸ்தவ அகதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று அதிபர் ட்ரம்ப் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியிருந் தார். இதற்கு கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பின் தலைவர் பிஷப் ஜோ கூறியபோது, அகதிகளை மதரீதியாக பிரித்துப் பார்ப்பதில் எங்களுக்கு உடன் பாடு இல்லை. கடவுள் எல்லோருக் கும் பொதுவானவர் என்று தெரி வித்தார்.
உலக தேவாலய சேவை அமைப்பின் துணை இயக்குநர் சைமர்ஸ் கூறியபோது, அகதி களுக்கு தடை விதித்து அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட நாள் ஒரு கறுப்பு தினம். இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்தார். இதேபோல பெரும் பாலான கிறிஸ்தவ மதத் தலைவர்கள், ட்ரம்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் விளக்கம்
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் அளித்துள்ள விளக்கத்தில், முன் னாள் அதிபர் பராக் ஒபாமா, இராக் அகதிகளுக்கு 6 மாதம் தடை விதித்தார். அதே அணுகு முறையை நானும் கடைப்பிடிக்கி றேன். என்னைப் பொருத்தவரை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். விசா தடை உத்தரவுகள் முஸ்லிம்களுக்கு எதிரானவை அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே அதிபர் ட்ரம்பின் தடை உத்தரவை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. அந்த நீதிமன்றங்கள் ஜனநாயகத்தை காப்பாற்றும் அரணாக செயல்படும் என்ற நம்பிக்கையுடன் நடுநிலையாளர்கள் காத்திருக் கின்றனர்.