Last Updated : 12 May, 2017 02:10 PM

 

Published : 12 May 2017 02:10 PM
Last Updated : 12 May 2017 02:10 PM

இந்தியா, ஆப்கானை தாக்க பாக். தீவிரவாதிகள் சதி: அமெரிக்கா தகவல்

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனர் டேனியல் கோட்ஸ் கூறும்போது, "பாகிஸ்தான் தீவிரவாதத்தை தடுக்கத் தவறிவிட்டது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் அந்த பிராந்தியத்தில் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. மேலும் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் தெற்கு ஆசியாவில் உளவுத்துறை வரும் 2018-ம் ஆம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமை மோசமடையக் கூடும் என மதிப்பீடு செய்துள்ளது. இதன் காரணமாக மோசமான பொருளாதார சூழலுக்கு ஆப்கானிஸ்தான் உள்ளாக்கப்படும்.

பாகிஸ்தானை பொறுத்தவரை அந்நாட்டில் வளர்ந்து வரும் பயங்கரவாதம் காரணமாக சர்வதேச நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற பயம் அந்த நாட்டிடம் உள்ளது. மேலும் இந்தியா சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்து வருவது குறித்த கவலையும் பாகிஸ்தானிடம் காணப்படுகிறது.

இதன் காரணமாக தனிமைப்படுத்தப்படுவதை சரிசெய்ய, இந்திய பெருங்கடலில் சீனா செல்வாக்கு பெறுவதற்கு அந்நாட்டுடனான உறவை பாகிஸ்தான் மேம்படுத்தும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x