

வடக்கு மாகாண முதல்வராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் திங்கள்கிழமை பதவியேற்க உள்ள நிலையில் அந்த கூட்டமைப்பில் அமைச்சர் பதவி தொடர்பாக மோதல் உருவாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்படுத்தும் அரசில் 4 பேர் அமைச்சர்களாக இடம்பெற உள்ளனர். அதில் ஒருவராக கே.எம்.சிவாஜிலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதனால் அதிருப்தி அடைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன், தமிழீழ விடுதலை இயக்கத் தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்து ள்ளார்.
இந்த கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு, இலங்கை தமிழ் அரசு கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
வன்னி மாவட்டத்தில் உள்ள ஒருவருக்குத்தான் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் அடைக்கலநாதன். சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
வன்னி மாவட்டத்தில் டெலோ கட்சிக்கு கணிசமான ஆதரவு உள்ளது. வன்னியிலிருந்து ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கச் செய்வோம் என கட்சித் தலைமை ஏற்கெனவே உறுதி கொடுத்திரு ந்தது என்றார் அடைக்கலநாதன்.
38 உறுப்பினர்களை கொண்ட வடக்கு மாகாண சபைக்கு கடந்த செப்டம்பர் 21ம் தேதி நடந்த தேர்தலில் 30 இடங்களை வென்று நிகரற்ற சாதனை படைத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
தனி ஈழம் கோரி போராடி வந்த விடுதலைப் புலிகளின் கோட்டையாக திகழ்ந்த இந்த மாகாணத்துக்கு 25 ஆண்டு களுக்குப் பிறகு தேர்தல் நடந்தது. மாகாண முதல்வராக சி.வி.விக்னேஸ்வரன் திங்கள்கிழமை கொழும்பில் பதவிேயற்கிறார், அவருக்கு அதிபர் மகிந்த ராஜபட்ச பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மாகாண சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் 11-ம் தேதி பதவியேற்கின்றனர்.