

பிரிட்டனைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆலன் ஹென்னிங் (47) தலை துண்டித்து கொல்லப்பட்ட வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் இந்த செயல் கோழைத்தனமானது என ஐ.நா கூறியுள்ளது. இது ஒரு மனிதாபிமானமற்ற செயல் எனவும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்தச் செயல் உலகம் முழுவதும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக நலப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எடுத்துரைக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் கொடூரத்தன்மையால் சிரிய மக்களின் பெயரும் பாதிக்கப்படுகிறது.
47 வயதான ஆலன் ஹென்னிங் 10 மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டார்.