

கொலம்பியாவில் 160 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 31 பேர் மாயமாகினர்.
இதுகுறித்து கொலம்பியா அரசு தரப்பில், "கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் மெடலின் நகரிற்கு அருகேவுள்ள ஏரியில் பயணிகள் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர். 31 பேர் மாயமாகினர். விபத்திலிருந்து மீட்கபட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாயமானவர்களை மீட்கும் பணி விரைவாக நடந்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை மீட்பதற்காக மீட்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளைக் கொண்டு தீவிரமான தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.