

தென் கொரிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூன் ஜே-இன்னைவிட அவரது பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ள ஜோய் யங் ஜே அந்நாட்டு மக்களிடையே அதிகம் கவனம் பெற்றிருக்கிறார்.
36 வயதான ஜோய் யாங் ஜே தற்போது தென்கொரிய நெட்டிசன்களின் கதாநாயகனாக உருவாகியுள்ளார்.
தென்கொரிய அதிபராக மூன் ஜே இன் மே 11-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவரின் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட ஜோய் யாங் ஜே-வின் மிடுக்கான தோற்றம் காரணமாக அவரது புகைப்படங்கள் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் #BodyguardBae என்ற ஹேஷ்டேக்குடன் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் மூலம் தென்கொரியாவின் பிரபலமாக மாறியிருக்கிறார் ஜோய் யாங் ஜே.
தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் பாதுகாவலர் ஜோய் யாங் ஜே.
தன் மீது விழுந்துள்ள இந்த திடீர் வெளிச்சம் குறித்து கொரியா டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் ஜோய் யாங் ஜே கூறும்போது, "என்னால் இன்னும் நம்ப முடியவில்லலை, நான் கவனிக்கப்பட்டுள்ளேன் என்று, இந்த அனுபவம் நன்றாக இருந்தாலும் என் மீது செலுத்தப்பட்டுள்ள இந்த திடீர் கவனம் என்னை கவலையடையச் செய்துள்ளது. மக்களின் கவனம் அதிபர் மீது இருக்க வேண்டும் என் மீது அல்ல. நான் மீது விழும் வெளிச்சத்தை ஏற்க விரும்பவில்லை. தென் கொரிய அதிபரை பாதுகாப்பதையே நான் விரும்புகிறேன்" என்றார்.