

அமெரிக்காவில் குருத்வாராவில் பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து 'ஃபாக்ஸ் 12' செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்திலுள்ள குருத்வாரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திமொதி வால்டர் ஸ்மிட் என்ற நபர் மது அருந்திவிட்டு நுழைந்திருக்கிறார். பின் அங்குள்ள கழிவறையை உபயோகிக்க அனுமதி கேட்டுள்ளார். குருத்வாரா அதிகாரிகளும் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
அப்போது அந்த நபர் கழிவறைக்குள் நுழைந்த 26 வயது பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இந்த நிலையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த நபரை கைது செய்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மீது பலாத்கார முயற்சி, தாக்குதல், பாலியல் அத்துமீறல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளி கைது செய்யப்பட்டது தொடர்பாக சீக்கிய கூட்டமைப்பு காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளது.