

ஐஎஸ் தீவிரவாதிகளை தோற்கடிப்பதே அமெரிக்காவின் முதல் இலக்கு என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.
ஐஎஸ் தீவிவாத இயக்கத்துக்கு எதிராக 10-வது உலகளாவிய கூட்டணி மாநாட்டில் பங்கேற்ற ரெக்ஸ் டில்லர்சன் பேசும் போது, "மத்திய கிழக்கு நாடுகளில் எதிர்கொள்ள பல சவால்கள் உள்ளன. இருப்பினும் ஐஎஸ் தீவிரவாதிகளை தோற்கடிப்பதே அமெரிக்காவின் முதன்மையான இலக்கு. ஐஎஸ்ஸுக்கு எதிரான சண்டையில் வலிமையுடன் போராட தாயராக இருக்கிறோம்" என்றார்.
இதற்கிடையில் இந்திய - அமெரிக்க பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நான்கு நாள் பயணமாக அமெரிக்க செல்கிறார்.
ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக அஜித் டோவல் வாஷிங்டன் செல்கிறார். அங்கு அவர், ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
மார்ச் 24-ம் தேதி அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ்ஸை சந்திக்கிறார் அஜித் டோவல்.
மேலும் இந்தப் பயணத்தில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்ட்ரை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.