உலகம்
லண்டன் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 30 ஆனது
லண்டன் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 14-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் முதல் நாளில் 6 பேர் உயிரிழந்தனர். அடுத்த நாளில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. நேற்று நிலவரப்படி 30 பேர் பலியாகி விட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 100 ஆக உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் வில்லியம் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
