

பாகிஸ்தானினில் பயங்கரவாதிகள் இன்று நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 போலீஸார் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துன்கவா மாகாணம், பெஷாவரின் புறநகரான சுலைமான் கெல் பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் பெஷாவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மற்றொரு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வந்து பரிசோதித்தனர். அதன்பிறகு அப்பகுதியில் இயல்புநிலை திரும்பியதாக தகவல்கள் கூறுகின்றன.