

தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கடந்த 5-ஆம் தேதியன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஸ் மிஸ்ரா ஆகியோர் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளனர்.
உலகம் முழுவதும் இருந்து 53 நாடுகளின் தலைவர்கள், மண்டேலா நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். 2 மணி நேரம் நினைவாஞ்சலிக் கூட்டம் நடைபெறுகிறது.
கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரேசில் அதிபர் டில்மா, கியூப அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ, நமிபியா நாட்டு அதிபர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.