இளம் தலைவர்கள் பட்டியலில் 3 இந்தியர்: ஐ.நா. சபை வெளியீடு

இளம் தலைவர்கள் பட்டியலில் 3 இந்தியர்: ஐ.நா. சபை வெளியீடு
Updated on
1 min read

ஐ.நா.வின் இளம் தலைவர்கள் பட்டியலில் இரு இந்தியர்கள், ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் உட்பட 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.

நீடித்த வளர்ச்சி இலக்கில் அவர்களின் தலைமைப் பண்பு, ஏழ்மை ஒழிப்பில் பங்களிப்பு, சமத்துவம், சமநீதிக்கான போராட் டம், வரும் 2030-ம் ஆண்டுக்குள் பருவநிலை மாறுபாட்டை எதிர் கொள்ளும் திட்டம் ஆகியவை சார்ந்து 17 இளம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் கல்வி, மறுவாழ்வு, பாலின அத்துமீறல்களுக்கு எதி ரான நடவடிக்கைக்காக ஷீசேய்ஸ் என்ற அமைப்பை நிறுவிய திரிஷா ஷெட்டி (25) இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

திருமணம், திருவிழாக்கள், கொண்டாட்டங்களில் உணவுகள் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, அவற்றைத் தேவைப்படுவோர்க்கு கொண்டு சேர்ப்பதற்காக ஃபீடிங் இந்தியா அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வரும் அங்கித் கவார்ட்டா (24) இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்தியர் ஆவார்.

அமெரிக்க வாழ் இந்தியர் கரண் ஜெராத் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். கடலுக்கடி யில் உள்ள எண்ணெய்க் கிணறு களில் இருந்து எண்ணெய் எடுக்கும்போது, எண்ணெய் சிந்தாமல் இருப்பதற்கான மூடி அமைப்பைக் கண்டறிந்ததற்காக இவர் இப்பட்டியலில் இடம்பிடித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in