

இந்தியாவின் பதான்கோட் விமானப் படைத் தளத்தின் மீது கடந்த ஆண்டு ஜனவரியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா. சபையில் இந்தியா முறையிட்டு வருகிறது.
ஆனால் சீனாவின் வீட்டோ அதிகாரத்தால் இந்தியாவின் கோரிக்கை 3 முறை நிராகரிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியபோது, தீவிரவாத விவகாரத்தில் சீனா இரட்டை வேடம் போடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் செங் சுஹாங் கூறியபோது, மசூத் அசார் விவகாரத்தில் சீனா இரட்டை வேடம் போடவில்லை.விதிகளின்படியே நாங்கள் செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.