

பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் குர்ரம் மாகாணத்தின் சந்தைப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) நடந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு குறித்து அதிகாரிகள் தரப்பில், "பாகிஸ்தானில் வடமேற்குப் பகுதியில் ஆப்கன் எல்லையில் ஒட்டி அமைந்துள்ள குர்ரம் மாகாணத்தில் உள்ள இத்க்ஹா காய்கறி சந்தையில் நடந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகினர். காயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.