

நாசாவின் கெப்ளர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மேற் கொண்ட ஆய்வில் சூரிய குடும் பத்துக்கு வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கிரகங்களில் சிலவற்றில் உயிர்கள் வாழ்ந்து வருவதற்கான சாத்தியகூறுகளும் இருக்கலாம் என கருதப்படுகிறது.
நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே 104 கிரகங்கள் சுழன்று வருவதை விண்வெளி ஆராய்ச் சியாளர்கள் தற்போது உறுதி செய்துள்ளனர். அதில் குறைந்த பட்சம் நான்கு கிரகங்களாவது பூமியைப் போன்ற சூழ்நிலையை கொண்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். மேலும் அவை அனைத்தும் பூமியின் சுற்றளவை விட, 20 முதல் 50 சதவீதம் பெரியதாக உள்ளன.
இந்த புதிய உலகங்கள் அனைத்தும் கும்பம் விண்மீன் திசையில் இருந்து 181 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2 - 72 என்ற குள்ள நட்சத் திரத்தை சுற்றி வருகின்றன. அங்குள்ள முக்கிய விண்மீன் நமது சூரியனை விட அளவில் பாதியாக, குறைந்த பிரகாசத் துடன் காணப்படுகிறது.
அந்த கிரகங்களின் சுற்றுப் பாதை காலங்கள் ஐந்தரை முதல் 24 நாட்கள் வரை நீடிக்கின்றன. அவற்றில் இரு கிரகங்களின் கதிர்வீச்சு அளவுகள் நமது பூமிக்கு இணையாக உள்ளன.
அரிசோனா பல்கலைகழக சந்திர மண்டல மற்றும் கோள ரங்க ஆய்வகத்தின் பேராசிரியர் இயன் கிராஸ்பீல்டு கூறும்போது, ‘‘கெப்ளர் விண்கலத்தின் கே2 ஆய்வு மூலம் சிறிய, சிவப்பு விண்மீன்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கண்டறிந் துள்ளோம்’’ என்றார். சூரிய குடும்பத்துக்கு அப்பால் சுற்றி வரும் இந்த கிரகங்களில் உயிரி னங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு கள் அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.