

ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகரில் நேற்று முன்தினம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தங் கள் நாட்டின் தூதரக அதிகாரிகள் 5 பேர் இறந்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யூஏஇ) கூறியுள்ளது.
“இவர்கள் ஆப்கானிஸ்தானில் கல்வி, மனிதாபிமான மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்ளச் சென்றவர்கள்” என்று எமிரேட்ஸ் வெளியுறவு அமைச் சகம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் காபூல், காந்தகார் உள்ளிட்ட 3 நகரங்களில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதல் சம்பவங்களில் சுமார் 57 பேர் இறந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். இதில் காந்தகாரில் மட்டும் எமிரேட்ஸ் தூதரக அதி காரிகள் 5 பேர் உட்பட 11 பேர் இறந்தனர். மேலும் ஆப்கானிஸ் தான் நாட்டுக்கான எமிரேட்ஸ் தூதர் ஜுமா அல்-காபி உட்பட 17 பேர் காயம் அடைந்தனர்.
காந்தகாரில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு எமி ரேட்ஸ் பிரதிநிதிகள் சென்றபோது, அலுவலகத்தில் குண்டு வெடித்தது.
காந்தகார் தவிர காபூல் நகரில் நாடாளுமன்ற கட்டிடம் அருகில் இரு குண்டுகள் வெடித்ததில் 30 பேர் இறந்தனர். 80 பேர் காயம் அடைந்தனர். இவ்விரு சம்பவங்கள் தவிர, ஹெல்மாண்டு மாகாணத்தில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்கு தலில் பலர் இறந்தனர்.
காபூல் மற்றும் ஹெல்மாண்டு தாக்குதல்களுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.