

இஸ்ரேல் முழுவதும் உள்ள சிறை களில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பாலஸ்தீனர்கள் உள்ளனர்.
பொய் வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சிறைகளில் போதுமான வசதிகள் இல்லை என்றும் நீண்டகாலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இநநிலையில் மார்வன் பர்கோட்டி என்ற பாலஸ்தீன தலைவர் தலைமையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் நேற்றுமுதல் கால வரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸின் அரசியல் வாரிசாக மார்வன் பர்கோட்டி கருதப்படுகிறார்.