

இலங்கை தலைநகர் கொழும்புவில் 22-வது காமன்வல்த் மாநாடு தொடங்கியது.
மாநாட்டுக்கு வருகை தந்திருந்த தலைவர்களை வரவேற்றுப் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்ஷே : காமன்வெல்த் கூட்டமைப்பு ஒன்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவோ அல்லது நீதி அமைப்போ இல்லை.
எனவே மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உறுப்பு நாடுகள் அனைத்தும் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையை, 30 ஆண்டு காலமாக அச்சுறுத்தி வந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வறுமை ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு ஆகிய துறைகளில் இலங்கைக்கு காமன்வெல்த் நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
காமன்வெல்த் மாநாட்டை கனடா, மொரீஷியஸ் நாடுகள் புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.