Last Updated : 24 Oct, 2014 09:54 AM

 

Published : 24 Oct 2014 09:54 AM
Last Updated : 24 Oct 2014 09:54 AM

மேற்கு ஆப்பிரிக்காவில் 10 ஆயிரம் பேருக்கு எபோலா பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கினியா, லைபீரியா, சியர்ரா லியோன் ஆகிய 3 நாடுகள் எபோலா வைரஸால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நாடுகளில் மட்டும் 9,936 பேர் எபோலை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,877 பேர் எபோலா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.

எபோலா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் 10 ஆயிரம் பேரை எட்டி விடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எபோலா வைரஸ் தொடர்பான அவசரகால மாநாடு மூன்றாவது சுற்றாக ஜெனீ வாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்த்தில் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எபோலா வைரஸுக்கு இதுவரை உரிய அங்கீகாரம் பெற்ற மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை மருந்து

இதனிடையே ஆர்விஎஸ்வி எனும் பரிசோதனை அடிப் படையிலான தடுப்பு மருந்து கனடாவிலிருந்து ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவ மனைக்கு தருவிக்கப் பட்டுள்ளது. வின்னிபெக்கிலுள்ள தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மருந்து குரங்குகளின் மீது பரிசோதிக்கப்பட்டதில், ஓரளவு பயனளிக்கத்தக்கவகையில் இருந்ததாக, உலக சுகாதார அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ‘வரும் 2015-ம் ஆண்டு தொடக்கத்துக்குள் போதுமான மருந்துகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைப்பதுதான் இலக்கு’ என உலக சுகாதார அமைப்பின் துணைத் தலைவர் மேரி பால் கியெனி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x