தென் கொரியாவில் பரவும் அபாயகரமான மெர்ஸ் நோய்: இதுவரை 154 பேர் பாதிப்பு

தென் கொரியாவில் பரவும் அபாயகரமான மெர்ஸ் நோய்: இதுவரை 154 பேர் பாதிப்பு
Updated on
1 min read

தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் 'மெர்ஸ்' நோய் தாக்கி தற்போதை நிலை வரை பாதிக்கப்பட்டோ எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மே 20-ம் தேதி சவுதி அரேபியாவிலிருந்து தென் கொரியா திரும்பிய நபருக்கு முதன் முதலில் 'மெர்ஸ்' (மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மூச்சுத்திணறல் நோய்) தாக்கியது கண்டறியப்பட்டது.

அவரைத் தொடர்ந்து இந்நோய் தென்கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. 'மெர்ஸ்' நோய் தாக்கி, தென் கொரியாவில் நேற்று மட்டும் 3 பேர் பலியாகியதாகவும், நோய் பரவும் ஆபாயம் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சியோலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கு மட்டும் நோய் முற்றிலும் குணமடைந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் பல நகரங்களைச் சேர்ந்த 154 பேர் இதுவரை நோய் தாக்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக சினுவா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோயாளிகளை வாகனங்களில் ஏற்றிச் சென்ற டிரைவருக்கு நோய் ஏற்பட்டது போன்ற பல்வேறு சம்பவங்களால், நோய் பீதி அங்கு அதிகமாகவுள்ளது.

நோய் அறிகுறிகளுடன் இருக்கும் சுமார் 5,000 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in