

சீனாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 324 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் இதனுடைய தாக்கம் 6.6 என்பதாக இருந்தது.
சீனாவில் ஜிங்கு டாய், யி தன்னாட்சி பகுதி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு 9.49 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமார் 5 கிமீ ஆழத்துக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பாதிப்புகள் ஜிங்கு டாய் பகுதியில் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள 92,700 பேரும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 56,880 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஜிங்குடாய் பகுதியில் 800க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 132 தீயணைப்பு வண்டிகள், 35 மோப்ப நாய்கள் போன்றவையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.