

இந்தியாவின் தங்கம் இறக்குமதி டிசம்பர் மாதத்தில் 11 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17,692 கோடி ரூபாயாக இருந்த தங்க (நகை மற்றும் கட்டி) இறக்குமதி இப்போது 11 சதவீதம் சரிந்து ரூ.15,735 கோடியாக இருக்கிறது.
தங்க நகைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக இறக்குமதி சரிந்திருக்கிறது. ஆனால் அதே சமயம் வைர இறக்குமதி அதிகரித்திருப்பதாக ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி சங்கத்தலைவர் விபுல் ஷா தெரிவித்தார்.
வைர இறக்குமதி 6 சதவீத அளவுக்கு அதிகரித்து 10,230.83 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருட டிசம்பர் மாதத்தில் 3,816 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த தங்ககட்டி இறக்குமதி இப்போது 45 சதவீதம் சரிந்து, ரூ 2,111.58 கோடியாக இருக்கிறது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இறக்குமதி 10 சதவீதம் சரிந்திருக்கிறது.
கடந்த வருட இதே காலகட்டத்தில் 1,49,570 கோடி ரூபாயாக இருந்த தங்க இறக்குமதி, இப்போது குறைந்து ரூ.1,33,980 கோடி ரூபாயாக சரிந்திருக்கிறது.