

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின் போது நிகழ்ந்த போர்குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள் வலியுறுத்த வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின், ஆசிய பிராந்தியத்திற்கான தலைவர் பிராட் ஆட்ம்ஸ் இதனை தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச உச்சிமாநாட்டில், காமன்வெல்த் உறுப்பு நாடுகள் இலங்கை மீதான போர்குற்றங்கள் பற்றி பதிவு செய்யாவிட்டால், அது காமன்வெல்த் அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக ஆக்கி விடும் என்றும் தெரிவித்தார்.
2009-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையரின் நிலைப்பாட்டிற்கு காமன்வெல்த் உறுப்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.