Last Updated : 11 Aug, 2016 10:05 AM

 

Published : 11 Aug 2016 10:05 AM
Last Updated : 11 Aug 2016 10:05 AM

துப்பாக்கி வைத்திருப்பவர்கள் நினைத்தால் ஹிலாரி வெற்றியை தடுக்க முடியும்: டொனால்டு ட்ரம்ப் சர்ச்சை கருத்து

துப்பாக்கி வைத்திருப்பவர்கள் நினைத்தால், ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் ஆவதைத் தடுக்க முடியும் என்று சக போட்டியாளர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது சர்ச்சைக்குள்ளாகி பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து வரும் நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனுக்கும் குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்புக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவு கிறது. இந்நிலையில், வடக்கு கரோலினாவின் வில்மிங்டனில் நடந்த தேர்தல் பிரச்சாரத் தின்போது ட்ரம்ப் பேசியதாவது:

நமது அரசியலமைப்பு சட்டத்தின் 2-வது திருத்தம், தற்காப்புக்காக தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வதற் கான உரிமையை வழங்கி உள்ளது. ஆனால், தான் அதிபரானால் இந்தத் திருத்தத்தை ரத்து செய்துவிடுவேன் என ஹிலாரி கூறுகிறார். அதாவது துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை பறிபோய்விடும்.

அவ்வாறு ரத்து செய்தால் தனி நபர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே, துப்பாக்கி உரிமம் வைத்திருப் பவர்கள் நினைத்தால், அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெறுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசி உள்ளார். இவரது இந்தக் கருத்து சக போட்டியாளருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக ட்ரம்பின் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து ஹிலாரியின் பிரச்சார மேலாளர் ராபி மூக் கூறும்போது, “ட்ரம்பின் கருத்து அபாயகரமானது. நாட்டின் அதிபராக விரும்பும் ஒரு நபர் (ட்ரம்ப்), எந்தக் காரணத்துக்காகவும் வன் முறையைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது” என்றார்.

ஆனால், ட்ரம்ப் தனது கருத்தை நியாயப்படுத்தும் வகை யில் பேசும்போது, “ஹிலாரி அதிபராவதைத் தடுக்கும் வகை யில், சக்தி வாய்ந்த வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று எனது ஆதரவாளர்களிடம் கூறினேன். இதை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்” என்றார்.

டொனால்டு ட்ரம்ப் அதிபரா னால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 50 பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ட்ரம்ப் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள் ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x