பாரம்பரிய உடை வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை

பாரம்பரிய உடை வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை
Updated on
1 min read

மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும்போது, பாதுகாப்பு கருதி அரேபிய பாரம்பரிய உடைகளை அணிய வேண்டாம் என ஐக்கிய அரபு அமீரகம் தனது நாட்டு குடிமக்களை எச்சரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அமகது அல் மென்ஹாலி (41) என்பவர் அமெரிக்காவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.

ஓஹியோ மாகாணத்துக்குச் சென்றிருந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது உடலை முழுமையாக மறைக்கும் அரேபிய பாரம்பரிய உடை அணிந்து, உணவு விடுதிக்குச் சென்றார். உணவு விடுதிக்கு வெளியே போனில் அரபி மொழியில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, போலீ ஸார் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரை குப்புற படுக்க வைத்து, கைகளைப் பின்னால் கட்டி, கைவிலங்கு அணிவித்து அழைத்துச் சென்றனர்.

தீவிர விசாரணைக்குப் பிறகு, அவர் மருத்துவப் பரிசோதனைக் காக வந்திருப்பது தெரிய வந்ததும் விடுவிக்கப்பட்டார். தங்கள் நாட்டு குடிமகன் அவ மானப்படுத்தப்பட்டதற்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் தெரி வித்துள்ளது.

வெளிநாட்டு பயணம்

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளுக்குச் செல் லும் தங்களது குடிமக்கள் பாது காப்பு காரணங்களை முன்னிட்டு, பாரம்பரிய உடைகளை பொது இடங்களுக்கு அணிந்து செல்ல வேண்டாம் என ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத் துள்ளது. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடியபடி உடை அணிவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளதையும் அமீரகம் குறிப்பிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in