ஜப்பான் கடலில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

ஜப்பான் கடலில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
Updated on
1 min read

உலக நாடுகளின் எச்சரிக்கையும் மீறி மீண்டும் ஜப்பான் கடலில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

வடகொரியா ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பான் மற்றும் கொரிய கடல் பகுதிக்கு இடையில் ஏவுகணை சோதனை நடத்தியதாகவும், இதனை வடகொரியாவின் அதிபர் கிங் ஜோங் உன் பார்வையிட்டதாகவும் தென் கொரியா மற்றும் ஜப்பான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியா நடத்திய இந்த ஏவுகணை சோதனை 280 மைல்கள் பாய்ந்து சென்று இலக்கை தாக்கக் கூடியது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

வடகொரியா நடத்திய இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அபே கூறும்போது, "உலக நாடுகள் தொடர்ந்து எழுப்பும் கண்டனங்களை சிறிதும் பொருட்படுத்தாமல் தன்போக்கில் செயல்படும் வடகொரியாவின் நடவடிக்கை ஏற்று கொள்ள முடியாதது. வடகொரியாவின் நடவடிக்கையால் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் இணைந்து ஜப்பான் தொடர்ந்து மக்களின் பாதுகாப்புக்காக செயல்படும்" என்றார்.

ஜி 7 நாடு தலைவர்களின் கூட்டத்தில், வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in