

அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை நேற்று 8 ஆக அதிகரித்துள்ளது.
நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி யில் இருநாள்களுக்கு முன்பு இரு கட்டிடங்கள் பெரும் வெடி சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்தன. அப்போது அங்கு தீ விபத்தும் ஏற்பட்டது. காஸ் கசிவுதான் இந்த விபத் துக்குக் காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. நேற்று கட்டிட இடிபாடு களில் இருந்து 2 ஆண்கள், ஒரு பெண்ணின் உடல் எடுக்கப்பட்டது. இதையடுத்து சாவு எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
அந்த கட்டிடத்தில் இருந்த மேலும் 9 பேரை காணவில்லை. அவர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் மொத்தம் 65 பேர் காயமடைந்துள்ளனர். இடிந்து விழுந்த இரு கட்டிடங்களும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அதில் ஒரு தேவாலயம், 15 வீடுகள் மற்றும் பியானோ இசைக் கருவி விற்பனை செய்யும் கடை ஆகியவை இருந்தன. இந்த கட்டிடம் இடிந்ததால் அருகில் இருந்த 4 கட்டிடங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.