தலிபான்கள் மீது ராணுவ நடவடிக்கை

தலிபான்கள் மீது ராணுவ நடவடிக்கை
Updated on
1 min read

பாகிஸ்தானில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் தலிபான்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

பிபிசி செய்தி தொலைக்காட் சிக்கு அளித்த பேட்டியில் பிலா வல் புட்டோ கூறியதாவது:

பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது ஒரு வழிமுறை தான். ஆனால், அதற்கு முன்பாக நம்மை வலுவாக்கிக் கொள்ள வேண்டும். 2007-ம் ஆண்டு எனது தாயார் பேநசீர் புட்டோ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தீவிரவாதத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத் தும் என நம்பினேன். ஆனால், ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி தீவிரவாதத்துக்கு எதிராக போராட அரசியல்வாதிகள் தவறி

விட்டனர். தலிபான்களை எதிர்த்து பாகிஸ்தான் சார்பில் அமெரிக்கா போரிடும் என சும்மா இருந்துவிட்டனர் என்றார்.

வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர்.இந்த சூழ்நிலையில், பிலாவல் அதற்கு ஆதரவாக பேட்டி யளித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையே பாகிஸ்

தான் மண்ணில் தெஹரிக் – இ – தலிபான் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை விவாதம் நடை பெற்றது. தலிபான்களுடன் பேச்சு நடத்தும் விவகாரத்தில் உறுப்பி னர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in