அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்வேன்: ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்வேன்: ஹிலாரி கிளிண்டன்
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது எந்த எண்ணமும் இல்லை. எனினும், அது தொடர்பாக எதிர்காலத்தில் ஆலோசிப் பேன் என்று முன்னாள் வெளியுற வுத் துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“தேர்தலில் போட்டியிடுவது பற்றி சிந்திக்கவில்லை. இது தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என்று எனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளேன். எனினும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எதிர் காலத்தில் ஆலோசித்து முடிவு செய்வேன். இப்போதைக்கு நமது வெற்றிக்குத் தேவையான செயல்களில் ஈடுபடுவதே போதும் என்று நினைக்கிறேன்.

நான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, 2012-ம் ஆண்டு லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. எனது பதவி காலத்தில் சந்தித்த மிகப்பெரிய பிரச்சினை, அந்த தாக்குதல் சம்பவம்தான்” என்றார்.

லிபியா தூதரக தாக்குதல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி யான குடியரசு கட்சி, ஒபாமா அரசை கடுமையாக குறை கூறியுள்ளது. ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு எதிரான பிரச்சாரத்தில் லிபியா தூதரக சம்பவத்தை மீண்டும் எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும்; கடுமையான விமர்சனத்தை முன்வைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in