

அமெரிக்காவில் நடந்த இனவெறி தாக்குதலின்போது இந்தியர்களைக் காப்பாற்றுவதற்காக குறுக்கே பாய்ந்து குண்டடிபட்ட வெள்ளை இன அமெரிக்கருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒலாதேவில் மதுபான விடுதிக்குள் இருந்த இந்திய பொறியாளர் நிவாஸ் குச்சிபோட்லா (32) மற்றும் அவரது சக ஊழியர் அலோக் மாதசாணியை முன்னாள் கடற் படை வீரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நிவாஸ் உயிரிழந் தார். மற்றொரு இந்தியரான அலோக் மாதசாணி படுகாயமடைந் தார். அப்போது துப்பாக்கிச் சூட்டை துணிச்சலுடன் தடுக்க முயன்ற வெள்ளை இன அமெரிக்கரான இயன் கிரில்லட் என்பவரும் படுகாயமடைந்தார். மருத்துவ சிகிச்சைக்குப் பின் அவர் அண்மையில் வீடு திரும்பினார்.
இந்நிலையில் இயன் கிரில்லட்டின் இந்த துணிச்சலைப் பாராட்டி அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் ஹூஸ்டன் இந்திய இல்லத்தில் பாராட்டு விழா நடத்தினர். கன்சாஸில் சொந்த மாக வீடு வாங்கிக் கொள்வதற்காக ரூ.65 லட்சம் அமெரிக்க டாலர் நிதியையும் இந்தியர்கள் திரட்டிக் கொடுத்து கிரில்லட்டை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர். இந்நிகழ்ச்சி யில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்மா, கிரில்லட்டிடம் காசோலையை வழங்கினார்.
ஹூஸ்டனில் உள்ள இந்திய இல்லம், இந்திய வம்சாவளி அமெரிக்கர்களால் கட்டப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் இந்தியர் களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறும்.