

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் என்பிசி செய்தித் தொலைக்காட்சியில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
போர்ட் மேயர்ஸ் பகுதியில் உள்ள கிளப் ப்ளூ என்ற விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அமெரிக்க நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த தகவலின்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னதாக விடுதிக்கு வெளியே இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் நடந்ததாகவும், அதனைத் தொடர்ந்தே துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பதின் பருவத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்று அந்த விடுதியில் நடந்து கொண்டிருந்தது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.