தென் சீனக் கடலுக்கு வந்த அமெரிக்க போர் கப்பல்

தென் சீனக் கடலுக்கு வந்த அமெரிக்க போர் கப்பல்
Updated on
1 min read

அமெரிக்காவின் போர் கப்பல் ஒன்று தென் சீனக் கடலின் அருகில் வந்ததாக சீனா குற்றச்சாட்டியுள்ளது.

புதன்கிழமை அமெரிக்கா போர் கப்பல் ஒன்று அத்துமீறி தென் சீனக் கடலில் அருகில் வந்ததாக சீன கடற்படை அதிகாரிகள் தெரிவித்தன.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பிறகு முதல்முறையாக அமெரிக்க போர் கப்பல் ஒன்று சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள தென் சீனக் கடல் பகுதிக்கு சென்றுள்ளது. இதனால் மீண்டும் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளதா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெஃப் டேவிஸ் விளக்கம் அளித்துள்ளார். அதில், "நாங்கள் தினசரி ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுகிறோம். அதில் தென்சீனக் கடலும் அடங்கும்.

சர்வதேச விதிகளின்படி நாங்கள் எங்கு வேண்டுமானலும் பறக்கவும், கடலில் மிதக்கவும் உரிமை உண்டு. எங்களது ரோந்துப் பணிகள் குறிப்பிட்ட நாட்டையே அதன் கட்டுபாட்டுப் பகுதியைப் பற்றியது அல்ல" என்றார்.

முன்னதாக அமெரிக்காவின் இந்தச் செயல் குறித்து இது சட்டமீறல் என்றும் ஆத்திரமூட்டும் செயல் என்றும் சீனா விவரித்திருந்தது.

2017-ம் ஆண்டு முதல் அமெரிக்கா சீனாவுடன் நட்புறவை ஏற்படுத்த டர்ம்ப் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. வடகொரியாவின் தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளால் ஏற்பட்ட கொரிய தீபகற்ப பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் இரு நாடுகளும் இணைந்து ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in