

பாகிஸ்தானுக்கு 30 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2017 கோடி) ராணுவ உதவி வழங்குவதற்கு அமெரிக்க செனட் நிபந்தனை விதித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் (என்டிஏஏ)-2017 அமெரிக்க செனட்டில் நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பில 85-13 என்ற கணக்கில் நிறைவேறியது. கடந்த ஆண்டு என்டிஏஏ-2016 சட்டத்தில், பாகிஸ்தானுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் நற்சான்றிதழ் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்டர் சான்றிதழ் அளிக்கவில்லை.
இதனையடுத்து கூட்டாளி ஆதரவு நிதியத்திலிருந்து (சிஎஸ்எஃப்)30 கோடி அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு அளிக்க முடியாத சூழலுக்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஆளாகியுள்ளது. இந்த நிதி நடப்பு நிதியாண்டுக்கானது. வரும் செப்டம்பருடன் நடப்பு நிதியாண்டு நிறைவடைய உள்ளது.
செனட்டின் இந்த முடிவுக்கு அதிபர் மாளிகை ஆட்சேபம் தெரிவித்துள்ளது.