

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பயன்படுத்தியதாக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் படகினை 8 ஆண்டுகளுக்குப் பின் ஆய்வு செய்யவிருக்கிறது பாகிஸ்தான் நீதிக் குழு.
கடந்த 2008-ம் ஆண்டும் நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166-பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் மண்ணில் இருந்தே திட்டம் தீட்டப்பட்டது என இந்தியா கூறி வருகிறது. ஆனால், இந்திய தரப்பில் போதிய ஆதாரம் தரப்படவில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து இவ்விவகாரத்தில் சுணக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் மும்பை தாக்தலுக்கு பயன்படுத்திய படகினை ஆய்வு செய்யுமாறு நீதிக் குழுவுக்கு பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து 8 வருடங்கள் கழித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
அல்போஸ் துறைமுகத்திலுள்ள மும்பை தாக்குதலுக்கு பயன்படுத்திய படகினை ஆய்வு செய்யுமாறு மத்திய புலனாய்வு அமைப்பு பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்திடம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் தடுப்பு நீதிமன்றம் மும்பை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட படகினை ஆய்வு செய்யுமாறு தனது நீதிக் குழுவுக்கு உத்தரவு பிறப்பித்தது.
அண்மையில், இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப்பும், தேசிய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கரும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறைக்கு மும்பை தாக்குதல் நடந்து 8 வருடங்கள் கடந்து விட்டது. எனவே அது தொடர்பான வழக்குகளில் வேகம் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்தே பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் நீதிக் குழுவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.