

'காட்ஸில்லா' திரைப்படத்தைப் பார்க்கும்போது, பிரபல இயக்குநர் க்வென்டின் டாரன்டீனோ அழுததாகக் கூறியுள்ளார், நடிகை ஜூலியட் பினோஷ்.
காட்ஸில்லா திரைப்படத்தின் புதிய பதிப்பு மே மாதம் வெளியானது. இதில், ஜூலியட்டின் பாத்திரம் இறந்தபோது தான் அழுததாக, அவரிடமே டாரன்டீனோ கூறியுள்ளார்.
"ஒரு 3டி படம் பார்க்கும்போது முதல் முறையாக நான் அழுதுள்ளேன். எனது கண்ணாடியை கழற்றி விட்டு என் கண்ணீரை துடைத்தேன்" என்று தன்னிடம் டாரன்டீனோ கூறியதாக தெரிவித்த ஜூலியட், அதை சிறந்த பாராட்டாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய ஜூலியட், "படத்தில் இருந்த ஒரே பெண் கதாபத்திரம் நான்தான். அதிலும் 3 நிமிடங்கள் 45 நொடிகளே நான் திரையில் தோன்றுவேன். அப்படியிருக்கும்போது அது எவ்வளவு தூரம் சுவாரசியமாக இருக்கும் எனத் தெரியவில்லை" என தனது பார்வையைக் கூறியுள்ளார்.
காட்ஸில்லா திரைப்படத்தின் அடுத்த பாகம் 2018-ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.