

விமானம் மூலம் துபாய்க்கு ஹெராயின் போதைப்பொருள் கடத்த முயன்றது தொடர்பாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன ஊழியர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஐஏ-வுக்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த சனிக்கிழமை லாகூரில் உள்ள அலமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தி லிருந்து துபாய்க்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத் தில் போதைப்பொருள் கடத்தப் படுவதாக ரகசிய தகவல் கிடைத் ததையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (ஏஎன்எப்) சோதனை நடத்தினர். அப்போது அந்த விமானத்தின் கழிவறையில் ஹெராயின் மறைத்து வைத்திருந் தது தெரியவந்தது.
இதுதொடர்பாக விமான நிறு வன ஊழியர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன (பிஐஏ) செய்தித் தொடர்பாளர் டேனியல் ஜிலானி கூறும்போது, “குற்றச்சாட்டு நிரூ பணமானால் பிஐஏ ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.