Published : 02 Aug 2016 11:07 AM
Last Updated : 02 Aug 2016 11:07 AM

ஹாரி பாட்டரின் 7 புத்தகங்களை ஒப்பிக்கும் ஆஸ்திரேலிய இளம்பெண்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்தவர் பெக்கி சர்ரோக். இவர் ஹைலி சுப்பீரியர் ஆட்டோபயா கிராபிகல் மெமரி (ஹெச்எஸ்ஏஎம்) என்ற வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அதுவே அவருக்கு வரமாகவும், சாபமாகவும் இருக்கிறது.

சர்ரோக்கால் தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் துல்லிய மாக நினைவு வைத்திருக்க முடிகிறது. தற்போது 26 வய தாகும் சர்ரோக், ஹாரி பாட்டர் புத்தகத்தின் அதிதீவிர ரசிகை. ஹாரிபாட்டர் புத்தகத்தின் ஒவ் வொரு பக்கத்திலும் உள்ள வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே ஒப்பிக்கிறார்.

சேனல் 9 என்ற தொலைக் காட்சிக்காக அல்லிசன் லங்டன் இவரைப் பேட்டியெடுத்தார். அப்போதுதான் இவரின் அபார நினைவாற்றல் தெரியவந்தது.

7 புத்தகங்கள்

“நான் அவரை ஹாரி பாட்டர் புத்தகத்தை வைத்து பரிசோதித்துப் பார்த்தேன். ஏனெனில் அவருக்கு ஹாரி பாட்டர் புத்தகங்களின் அனைத்துப் பாகங்களின் கதையும் வரி, வார்த்தை மாறாமல் தெரியும். ஒரு புத்தகத்தை எடுத்து ஒரு வரியை நான் படித்தேன். அவர், அந்த புத்தகத்தின் பெயர், அத்தியாயத்தின் பெயர், அத்தியாயத்தின் எண் என அனைத்தையும் கூறினார்.

17-வது அத்தியாயம் எனச் சொன்னதும் அதனை முதல் வார்த்தையிலிருந்து வார்த்தை மாறாமல் அப்படியே ஒப்பித்தார். ஹாரி பாட்டரின் முதல் பாகம் மட்டுமல்ல, 7 புத்தகங் களையும் அப்படியே ஒப்பிக்க அவரால் முடிகிறது” என லங்டன் தெரிவித்தார். தன்வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் மிகத் துல்லிய மாக நினைவு வைத்திருக்கிறார் சர்ரோக். உலகில் ஹெச்எஸ்ஏஎம் பாதிப்பும், ஆட்டிசமும் கொண்டு வாழும் ஒரே நபர் இவர்தான்.

லங்டன் கூறும்போது, “எப்படி இவ்வாறு நிகழ்கிறது என்பது விநோதம்தான். மூளை பல அத்தியாயங்களைக் கொண்ட டிவிடியைப் போன்று இருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x