

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு சர்வதேச டேக்வாண்டோ கூட்டமைப்பு பிளாக் பெல்ட் கௌரவத்தை அளித்துள்ளது.
டேக்வாண்டோ என்பது கராத்தே போன்றதொரு தற்காப்புக் கலை. கொரியாவில் பிரபலமான இக்கலை, ஒலிம்பிக்கில் ஒரு விளையாட்டாக உள்ளது.
புதின் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டின் தலைநகர் சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு கௌரவ பிளாக் பெல்ட், டேக்வாண்டோ சீருடை, மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ரஷ்யாவில் டேக்வாண்டோ போன்ற தற்காப்புக் கலைகளுக்கு புதின் முக்கியத்துவம் அளித்து வருவதைப் பாராட்டி அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
புதினுக்கு டேக்வாண்டோதான் தெரியாதே தவிர ஜப்பானின் ஜுடோ தற்காப்புகலையில் அவர் சிறந்தவர். அதில் தனது அசாத்திய திறமையால் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு டேக்வாண்டோ கூட்டமைப்பு மூலம் கௌரவ பிளாக் பெல்ட் பெற்ற மற்றொரு விஐபி ஐ.நா. சபையின் தலைவர் பான் கீ மூன்.