Published : 17 Jan 2017 11:20 am

Updated : 16 Jun 2017 11:56 am

 

Published : 17 Jan 2017 11:20 AM
Last Updated : 16 Jun 2017 11:56 AM

இந்தியா, அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் 2017 இறுதிக்குள் அமலுக்கு வரும்

2017

இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தாண்டு இறுதிக் குள் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித் துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க வெளி யுறவு துணை செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது:

அமெரிக்கா-இந்தியா இடையி லான ஆக்கப்பூர்வ அணுசக்தி உடன்படிக்கையில், வர்த்தக ஒப் பந்தங்கள் குறித்தும், பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்தும் இரு நாடு களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவ்விரு அம்சங் களும், 2017-ம் ஆண்டின் மத்தியில் இறுதி செய்யப்பட்டுவிடும்.

அதன் பிறகு, இந்தாண்டு இறுதிக்குள் அமெரிக்கா-இந்தியா இடையிலான அணுமின் நிலைய திட்டம் தொடர்பான ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இரு நாட்டுத் தலைவர்களாலும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அண்மையில் இந்திய, அமெரிக்க தலைவர்கள் சந்தித்துப் பேசியபோதும் இதற்கான உறு தியை அளித்துள்ளனர். ஒப்பந்தத் தில் முக்கிய பங்காற்றும் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனத்துடனும் அமெரிக்க அதிகாரிகள் பேசி வரு கின்றனர். அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் ஒப்பந்தம் அமையும்.

முன்னாள் அதிபர் புஷ் தலைமை யிலான அரசில், இந்தியாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கப் பூர்வ அணுசக்தி ஒப்பந்தங்களுக் கான பேச்சுவார்த்தை முக்கியமான திருப்புமுணையாக அமைந்தது. ஆனால், விபத்து இழப்பீடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருந்தது.

அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் இப்பிரச்சினை களை தீர்த்து, ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பாதையை தெளிவுபடுத்துவார்கள் என நம்புகிறோம். இவ்வாறு பிஸ்வால் தெரிவித்தார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இந்தியாஅமெரிக்காஅணுசக்தி ஒப்பந்தம்2017 இறுதிக்குள் அமலுக்கு வரும்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author