ஆஸ்திரேலியாவில் இந்திய சங்கம திருவிழா: அரசு சார்பில் முதல்முறையாக நடக்கிறது

ஆஸ்திரேலியாவில் இந்திய சங்கம திருவிழா: அரசு சார்பில் முதல்முறையாக நடக்கிறது
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் முதல் 10 வாரங்களுக்கு இந்திய சங்கமத் திருவிழா நடைபெறவுள்ளது. முதல் முறையாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவுக்காக அந்நாட்டு அரசு சுமார் ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

மெல்போர்ன், சிட்னி, பெர்த், கான்பெர்ரா, அலைஸ் ஸ்பிரிங்ஸ், அடிலெய்டு மற்றும் பிரிஸ்பேன் என நாடு முழுவதும் உள்ள 7 நகரங்களில் வரும் ஆகஸ்ட் முதல் 10 வாரங்களுக்கு இந்த திருவிழா நடக்கவுள்ளது.

இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இந்த திருவிழாவை நடத்த ரூ.1 கோடியே 25 லட்சம் நிதியை பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான கூட்டணி அரசு ஒதுக்கியிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா வின் கலை மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சர் மிட்ச் பிட்பீல்டு கூறும்போது, ‘‘இந்த கலாச்சார திருவிழா மூலம் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலன நீண்டகால நட்பு மேலும் வலுப்படும். இந்தியாவின் இசை, நாட்டியம், நாடகம், கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஒரு புது அனுபவத்தை அளிக்கும்’’ என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்திய சங்கமத் திருவிழாவை நடத்துவதற்கான அறிவிப்பை முதன்முதலில் வெளியிட்டார். மேலும், கலை மற்றும் கலாச்சார கூட்டுறவு தொடர்பாக இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்தே ஆஸ்திரேலியா வில் இந்திய திருவிழா நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சிட்னியில் நேற்று முன் தினம் இந்த திருவிழா வுக்கான தேசிய ஊடக அறிமுக நிகழ்ச்சியை இந்திய தூதர் நவ்தீப் சூரி தொடங்கி வைத்தார்.

இந்திய சங்கம திருவிழாவில் ஆஸ்திரேலிய கலைஞர்களும், இந்திய கலைஞர்களுடன் கை கோர்க்கவுள்ளனர். குறிப்பாக இந்திய ஆன்மீக இசை குழுவை நடத்தி வரும் சோனம் கல்ரா, ஆஸ்திரேலிய கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். இதே போல் இந்திய கார்ட்டூனிஸ்ட் அஜித்நைனான் உட்பட பல்வேறு இந்திய பிரபலங்கள் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்கவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in