

கொழும்பு
இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு கோரவில்லை, ஒன்றுபட்ட நாட்டையே விரும்புகிறோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாத்தறை யில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது: இலங்கையில் அதிகாரப் பகிர்வு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இதனால் நாடு பிளவுபடாது என்று உறுதி கூறுகிறேன். தமிழர்களுக் காக தனி நாட்டை கோரவில்லை. ஒன்றுபட்ட இலங்கையையே விரும்புகிறோம். அனைவரும் ஒற்றுமையாக நல்லிணக்கத் தோடு வாழ வேண்டும்.
போரினால் ஏற்பட்ட வடுக்கள் எதிர்கால சந்ததியினரைப் பாதிக் கக்கூடாது. அதற்கேற்ற நடவடிக் கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இன்னும் 10 ஆண்டு காலத்துக்குள் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும். அதற்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.