

இந்தியாவுடன் சுமுகமான உறவை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்: "பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. இதனால், இரு நாட்டு மக்களின் வளம் மேம்படும். குடியரசு தின விழா கொண்டாட இருக்கும் தருணத்தில், இந்திய மக்கள் அனைவருக்கும் வளம் பெற வாழ்த்துகிறேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் பாகிஸ்தான் அதிபர் தனியாக வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.