

இராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு களில் 19 பேர் இறந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இரு இடங்களில் வெடிபொருள்கள் நிரப்பிய கார் மூலமும், ஒரு இடத்தில் வெடிகுண்டு மூலமும் இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. ஷியா முஸ்லிம்களின் இரு மசூதிகள் அருகிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த வர்த்தகப் பகுதியிலும் இந்த குண்டு வெடிப்பு கள் நிகழ்ந்தன.
கிழக்கு பாக்தாத் ஊர் மாவட்டத் தில் வெடிபொருள் நிரப்பிய கார் வெடித்ததில் 10 பேர் இறந்தனர், 23 பேர் காயமடைந்தனர். இதுபோல் மத்திய பாக்தாத் கர்ராடா பகுதியில் கார் குண்டு வெடித்ததில் 8 பேர் இறந்தனர், 25 பேர் காயமடைந்தனர். இது தவிர பாக்தாத் தென்மேற்கில் உள்ள அமில் பகுதியில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தோரின் எண்னிக் கையை மருத்துவ அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். ஆனால் இது குறித்த தகவல்களை அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அல் காய்தாவில் இருந்து பிரிந்து செயல்படும் “இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்டு தி லெவன்ட்” அமைப்பு இத்தாக்குதலை நிகழ்த்தி யிருக்கலாம் என கருதப்படுகிறது.
எகிப்து தாக்குதலுக்கு ஜிகாதிகள் பொறுப்பேற்பு இதனிடையே எகிப்தில் ஞாயிற்றுக்கிழமை டூரிஸ்ட் பஸ் மீதான தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஜிகாதிகள் அமைப் பான அன்சார் பேடால் மக்டிஸ் பொறுப்பேற்றுள்ளது. எகிப்தில் இஸ்ரேல் எல்லைக்கு அருகில் டாபா என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த 3 பேர் இறந்தனர். 14 பேர் காயமடைந்தனர். மேலும் உள்ளூரைச் சேர்ந்த பஸ் டிரைவர் இறந்தார். 2 பேர் காயமடைந்தனர்.