

இந்தோனேஷியாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. 19 பேரை காணவில்லை.
இது குறித்து இந்தோனேஷியாவின் பேரிடர் மேலாண்மை அமைச்சக செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ கூறும்போது, "இந்தோனேஷியாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 43-ஆக அதிகரித்துள்ளது. 19 பேரை காணவில்லை. 14 பேர் காயமடைந்துள்ளனர். .
பூர்வஜோ, பஞ்சார்னெகரா, கெபுமென் ஆகிய பகுதிகள் மோசமாக பாதிப்படைந்துள்ளன.
மத்திய ஜாவா முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் வெள்ளத்திலும், நிலச்சரிவில் சிக்கி உயிருடன் தவிப்பவர்களை மீட்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.