

வடகொரியாவில் எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் இதுவரை 133 பேர் பலியாகி உள்ளனர். 395 பேரை காணவில்லை.
வடகொரியாவின் சீனா, ரஷ்ய எல்லைப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் அந்தப் பிராந்தியம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
35 ஆயிரம் வீடுகள் இடிந் துள்ளன. 8700 வீடுகள் சேத மடைந்துள்ளன. சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளன. ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மழை வெள்ளம் காரணமாக இதுவரை 133 பேர் உயிரிழந் துள்ளனர். 395 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடகொரிய ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங் களும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.