இந்தியா- பாகிஸ்தான் இணைந்து திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும்: ஷபானா ஆஸ்மி விருப்பம்

இந்தியா- பாகிஸ்தான் இணைந்து திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும்: ஷபானா ஆஸ்மி விருப்பம்
Updated on
1 min read

இந்தியா பாகிஸ்தானில் உள்ள திரைத்துறையினர் இணைந்து படங்களைத் தயாரிக்க வேண்டும் என ஹிந்தி நடிகை ஷபானா ஆஸ்மி விருப்பம் தெரிவித்துள்ளார்.

‘சிந்து திருவிழா’வில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ விடுத்த சிறப்பு அழைப்பின் பேரில் ஷபானா ஆஸ்மி கராச்சி சென்றுள்ளார். அங்கு அவர் கூறியதாவது:

நான் மீண்டும் கராச்சிக்கு வந்திருப்பதற்காக மகிழ்வடைகிறேன். பாகிஸ்தானுக்கு வருவது எப்போதுமே மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம். ஏனெனில் இருநாட்டு மக்களுக்கும் இடையே பொதுவான அம்சங்கள் ஏராளமானவை உள்ளன.

சக மனிதர்களுடன் நாம் தொடர்பில் இருப்பதும், அவர்களைப்போலவே கலாச் சாரம், கலைகளில் பொதுவான அம்சத்தைக் கொண்டிருப்பதும் வரவேற்கத்தக்க அம்சம்.

பாகிஸ்தான் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தால் உண்மையிலேயே மிகவும் ஆர்வத்துடன் அதனைப் பரிசீலிப்பேன். கதைக்களம் மிக வலுவாக இருந்தால் ஒரு நடிகையாக எந்த நாட்டிலும், எந்த மொழியிலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்.

இருநாட்டு திரைத்துறையினரும் இணைந்து திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும். அது நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in