

வாடிகனில் போப் பிரான்சிஸ் தங்கியிருக்கும் உணவு விடுதியில், யூதர்களின் மரபுப்படி தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறப்பட்டது.
யூதர்களின் மரபில், சமைப்பதற்கான பொருள்களை தேர்ந்தெடுத்தல், பாத்திரங்களை கழுவுதல், சமைக்கும் முறை உள்ளிட்டவற்றில் மிகுந்த கவனம் செலுத்தப்படும். சமீபத்தில் அர்ஜென்டீனா நாட்டை சேர்ந்த 4 யூத மத குருக்களுக்கு போப் பிரான்சிஸ் விருந்தளித்தார். இந்த விருந்தில் யூத மரபுப்படி உணவு தயாரிக்கப்பட்டது. இப்பணி களை யூத மதகுரு ஜாகோவ் ஸ்பிஸிசினோ மேற்பார்வை யிட்டார்.
விரைவில் இஸ்ரேலுக்கு போப் பிரான்சிஸ் பயணம் செய்யவுள்ள நிலையில், யூதர்களை கவரும் வகையில் அவர் இந்த விருந்தை அளித்ததாக விமர் சனம் எழுந்துள்ளது.
ஆனால், இதற்கு முன்பும் பலமுறை இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிகளுக்கு போப் ஏற்பாடு செய்துள்ளார். கடந்த ஆண்டு வாடிகன் வந்த யூத மதகுரு ஆப்ரஹாம் ஸ்கோர்காவுக்கு, சான்டா மார்டா ஹோட்டலில் போப் பிரான்சிஸ் விருந்தளித்துள்ளார்.