அல் காய்தாவுக்கு எதிராக இராக்குக்கு உதவ ஈரான் தயார்

அல் காய்தாவுக்கு எதிராக இராக்குக்கு உதவ ஈரான் தயார்
Updated on
1 min read

அல் காய்தாவுக்கு எதிரான போரில் இராக்குக்கு உதவிடத் தயார் என்று ஈரான் அறிவித்துள்ளது.இராக்கில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு அன்பார் மாகாணத்தில், ஃபலூஜா, ரமாடி ஆகிய 2 முக்கிய நகரங்களில் அல்காய்தா தீவிரவாதிகள் கடந்த வாரம் நிலைகொண்டனர். இவர்களை விரட்டியடிப்பதற்காக இராக் அரசு மேற்கொண்ட தாக்குதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஈரான் ராணுவத்தின் துணை தளபதி ஜெனரல் முகமது ஹெஜாஸி, “இராக் நமது நட்பு நாடு. இராக் கேட்டுக்கொண்டால் அல்காய்தாவுக்கு எதிரான போரில் அந்நாட்டுக்கு ராணுவ தளவாடங்களும், ஆலோசனைகளும் வழங்கத் தயார். என்றாலும் ராணுவ வீரர்களை அனுப்பமாட்டோம்” என்று கூறியதாக ஈரான் ஊடகங்கள் திங்கள்கிழமை கூறின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in