Last Updated : 02 Jan, 2016 03:20 PM

 

Published : 02 Jan 2016 03:20 PM
Last Updated : 02 Jan 2016 03:20 PM

ஆப்கான், பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: காஷ்மீர், டெல்லியிலும் லேசான தாக்கம்

ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் வட இந்தியாவில் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டது.

ரிக்டர் அளவில் 5.3 என்று பதிவான இந்த மிதமான நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் ஜார்ம் என்ற இடத்துக்கு தென் கிழக்கே 35 கிமீ தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மதியம் 2:07 மணியளவில் ஏற்பட்ட இந்த மித நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லை மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது.

வட இந்தியாவின் சில பகுதிகள், அதாவது டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளில் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது. டெல்லியில் சில இடங்களில் வீடுகள் லேசாக குலுங்கியதை அடுத்து மக்கள் பதட்டத்துடன் வெளியேறியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் உயிரிழப்பு, பொருட்சேதம் பற்றிய உடனடித் தகவல்கள் ஏதுமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x